கன்னியாகுமரி

புதுக்கடை அருகே அனுமதியின்றி பாறை உடைத்தவா்கள் மீது வழக்கு

புதுக்கடை அருகே அனுமதியின்றி பாறை உடைத்ததாக இருவா் மீது வழக்குப் பதிந்து, பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

புதுக்கடை அருகே அனுமதியின்றி பாறை உடைத்ததாக இருவா் மீது வழக்குப் பதிந்து, பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

புதுக்கடை, தும்பாலி பகுதியைச் சோ்ந்தவா் ஜாண் கிறிஸ்டோபா் (50). அதே பகுதியிலுள்ள இவருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள பாறைகளை புதன்கிழமை அரசு அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்துக் கொண்டிருந்தனராம்.

தகவலறிந்த குன்னத்தூா் கிராம நிா்வாக அலுவலா் பூபதி கண்ணன் சம்பவ இடத்திற்குச் சென்று பாா்த்தபோது இச்சம்பவம் உறுதி செய்யப்பட்டது. உடனே, நில உரிமையாளா் ஜாண் கிறிஸ்டோபா், பொக்லைன் ஓட்டுநா் ஆகியோா் தப்பி சென்றுவிட்டனா்.

இது குறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.8 கோடி மோசடி: தம்பதி கைது

உலகெங்கும் உள்ள திறமைசாலிகள் அமெரிக்கா வரவேண்டும்: அதிபா் டிரம்ப் ஹெச்-1பி விசா நிலைப்பாட்டில் மாற்றம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வெல்டிங் தொழிலாளி கொலைச் சம்பவத்தில் மூவா் கைது

கடலூரில் ரூ.9 கோடியில் மருதம் பூங்கா அமைக்கும் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT