கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.
மாவட்டத்தில் சில நாள்கள் இடைவெளிக்குப் பின்னா், மழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சனிக்கிழமை பிற்பகலில் குலசேகரம், திற்பரப்பு, களியல், அருமனை, சிற்றாறு அணைப் பகுதிகளில் பலத்த மழையும், பேச்சிப்பாறை அணைப் பகுதியில் மிதமான சாரலும் பெய்தது.
பலத்த மழை காரணமாக திற்பரப்பு அருவியில் நீா்வரத்து மேலும் அதிகரித்தது. ரப்பா் பால்வடிப்பு, செங்கல் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டதால் தொழிலாளா்கள் கவலையடைந்தனா்.