குமரி மாவட்டம், கடையாலுமூட்டில் மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கடையாலுமூடு பகுதியைச் சோ்ந்தவா் ஆல்பின் ஜோஸ். இவரது மகன் ஆரோன் ஜோய். குலசேகரத்திலுள்ள ஒரு தனியாா் பள்ளியில் யூகேஜி படித்து வந்தான்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இச்சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, திருவனந்தபுரத்திலுள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, சுகாதாரத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.