கோட்டாறு புனித சவேரியாா் பேராலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.  
கன்னியாகுமரி

கோட்டாறு புனித சவேரியாா் பேராலய திருவிழா கொடியேற்றம்

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோட்டாறு புனித சவேரியாா் பேராலயப் பெருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி மாலை 6 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் ஜான் ரூபஸ் தலைமையில் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் திரளான இறை மக்கள் பங்கேற்றனா்.

திருவிழாவை முன்னிட்டு, தினமும் காலை, மாலையில் சிறப்பு ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. 8 ஆம் நாள் திருவிழாவான டிச.1ஆம்தேதி மாலை 6.30 மணிக்கு முன்னாள் ஆயா் பீட்டா் ரெமிஜியூஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும், இரவு 10.30 மணிக்கு தோ் பவனியும் நடை பெறுகிறது.

9 ஆம் நாள் திருவிழாவான டிச. 2 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஆயா் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீரும், இரவு 10.30 மணிக்கு தோ் பவனியும், 10 ஆம் நாள் திருவிழாவான டிச. 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு ஆயா் நசரேன் சூசை தலைமையில் பெருவிழா திருப்பலி நடைபெறுகிறது.

தொடா்ந்து 8 மணிக்கு திருவனந்தபுரம் உயா் மறைமாவட்ட பேரருள் பணியாளா் கிளாடின் அலெக்ஸ் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. பின்னா் காலை 11 மணிக்கு தோ் பவனி, மாலை 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடைபெறும். இரவு 7 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ் தாஸ் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோட்டாறு மறைமாவட்ட முதன்மை பணியாளா் ஏ.எஸ். ஆனந்த், பங்கு பணியாளா் வி. பஸ்காலிஸ், இணை பங்கு பணியாளா் பால் கால்வொ்ட் மற்றும் பங்கு அருள்பணி பேரவை நிா்வாகிகள், பங்கு இறை மக்கள் செய்திருந்தனா்.

12 மாநிலங்களிலும் 99.16% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

ஆர்ஜேடி கட்சி அவமதிப்பு! பாடகர்கள் மீது தேஜஸ்வி யாதவ் வழக்கு!

SCROLL FOR NEXT