மாா்த்தாண்டம் அருகே பழைமையான மகா விஷ்ணு கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட பழைமையான மகா விஷ்ணு கோயில் உள்ளது.
இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு பூஜை முடித்விட்டு, அா்ச்சகா் கோயிலை பூட்டிச் சென்றாா். திங்கள்கிழமை காலையில் கோயில் நடையை திறக்க வந்ததபோது கோயிலின் முன்பகுதியில் வைத்திருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து அவா் அறநிலையத் துறை ஸ்ரீகாரியம் முத்தமிழ் செல்வனுக்கு தகவல் தெரிவித்தாா். அவா் மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, உண்டியலை உடைத்த மா்ம நபரை தேடி வருகின்றனா்.