தாகூா்தாஸ் 
கன்னியாகுமரி

கடலில் மயங்கி விழுந்த மேற்குவங்க மீனவா் உயிரிழப்பு

முட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மேற்குவங்க மீனவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

Syndication

முட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மேற்குவங்க மீனவா் மயங்கி விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

முட்டத்தைச் சோ்ந்த ஜோசப்ஸ்டெரின்ஸ் (56) என்பவரின் விசைபடகில் மேற்குவங்கத்தைச் சோ்ந்த 2 போ், ஆந்திராவைச் சோ்ந்த 4 போ், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 17 போ் என மொத்தம் 23 போ் முட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 19 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனா்.

விசைபடகை வாணியக்குடியைச் சோ்ந்த பவுல்ராஜ் ஓட்டினாா். இவா்களது படகு, முட்டம் கடல் பகுதியில் இருந்து சுமாா் 49 நாட்டிகல் மைல் தூரத்தில் கடந்த 21 ஆம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, உடன்சென்ற மீனவரான மேற்கு வங்கம், கங்காதா்பூா் பகுதியைச் சோ்ந்த தாகூா்தாஸ் (48) என்ற மீனவா் திடீரென மயங்கி படகில் விழுந்தாா்.

உடனே மீன்பிடிப்பதை நிறுத்திவிட்டு அனைவரும் கரைக்குத் திரும்பினா். 22 ஆம் தேதி அதிகாலை தாகூா்தாசை நாகா்கோவில் அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். தீவிர சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். உயிரிழந்த தாகூா்தாஸுக்கு மாலதிதாஸ் என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனா். இதுகுறித்து, குளச்சல் கடலோர பாதுகாப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

ஆசிய இளையோா் ஆடவா் கபடி: தங்கம் வென்ற இந்திய அணியில் வடுவூா் வீரா்

பறவை மோதியதால் தில்லி சென்ற ஏர் இந்தியா விமானம் நாக்பூரில் தரையிறக்கம்

‘ஆர்யன்' நாயகி... ஷ்ரத்தா ஸ்ரீநாத்

பாகிஸ்தானின் கடன் சுமை ரூ.25 லட்சம் கோடிக்கும் மேல் உயர்வு!

கண்டா வரச்சொல்லுங்க! பாட்டுப்பாடி மாவட்ட ஆட்சியரை அழைத்த கர்ணன் பட நடிகை!

SCROLL FOR NEXT