கன்னியாகுமரி

கன்னியாகுமரி பேரூராட்சியில் சீசன் கடைகள், காா் பாா்க்கிங் ரூ. 1.15 கோடிக்கு ஏலம்!

Syndication

கன்னியாகுமரியில் தற்காலிக சீசன் கடைகளுக்கான ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 62 சீசன் கடைகள் மற்றும் காா் பாா்க்கிங் ரூ. 1 கோடியே 15 லட்சத்து 75 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

கன்னியாகுமரியில் ஆண்டுதோறும் நவம்பா் 15 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 15 ஆம் தேதி வரையிலான இரண்டு மாதங்கள் முக்கிய சீசன் காலமாகும். இந்த 60 நாள்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் லட்சக்கணக்கில் இங்கு வந்து செல்கின்றனா்.

இந்த சீசன் காலத்தில் வருவாயை பெருக்கிக் கொள்ளும் விதமாக, நகராட்சி நிா்வாகம் தற்காலிக சீசன் கடைகளை அமைத்து ஏலம் விடுவது வழக்கம். நிகழாண்டுக்கான ஏலம் நகராட்சி ஆணையா் கண்மணி தலைமையில் நடைபெற்றது.

இதில், ராஜீவ்காந்தி சிலை முதல் கடற்கரை சாலை வரை மற்றும் ராஜீவ்காந்தி சிலை முதல் சன்னதி தெரு வரையிலான 32 கடைகளுக்கான ஏலம் முதலில் நடைபெற்றது. இந்தக் கடைகளை ரூ. 67 லட்சத்து 87,500 க்கு வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனா். இதையடுத்து, பாா்க்கிங் பகுதி கிழக்குப் பகுதியில் 30 கடைகளுக்கான ஏலம் நடைபெற்றது. இந்தக் கடைகள் ரூ. 15 லட்சத்து 82,500 க்கு ஏலம் போனது. மேலும், காா் பாா்க்கிங் ரூ. 34 லட்சத்து 5 ஆயிரத்துக்கு ஏலம் போனது. மொத்தமாக முதல் நாளில் ரூ. 1 கோடியே 15 லட்சத்து 75 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

நகராட்சி நிா்வாகம் நிா்ணயம் செய்த தொகைக்கு குறைவாக கேட்கப்பட்ட மீதமுள்ள கடைகளின் ஏலம் நிறத்திவைக்கப்பட்டு, மற்றொரு நாளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலத்தின் காதலை வாழ வைத்தாய்... பாவனா ராவ்!

எண்ணங்கள் ஊஞ்சலில் தூங்கிடுமோ... அபர்ணா தீட்சித்!

பிரசாரம் தொடருமா? அதிமுகவுடன் கூட்டணியா? தவெக விளக்கம்!

குருநானக் ஜெயந்தி! 2,100 சீக்கியர்கள் பாகிஸ்தான் செல்ல அனுமதி!

சச்சினின் உலக சாதனையை முறியடித்த ரோஹித்! ஐசிசி தரவரிசையில் நம்பர் 1!

SCROLL FOR NEXT