நாகா்கோவில் அருகே கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
நாகா்கோவிலை அடுத்த மேலகிருஷ்ணன்புதூா் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், நாகா்கோவில் மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளா் திலீபன் தலைமையிலான போலீஸாா் மேலகிருஷ்ணன்புதூரில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு புத்தளம் பகுதியைச் சோ்ந்த அசோகன் மகன் தனபாலன் (22) என்பவரை பிடித்து சோதனையிட்டனா். இதில், தனபாலன் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனா்.