கன்னியாகுமரி

பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றம் குறைப்பு

உபரிநீா் குறைக்கப்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு நீங்கி மிதமாக விழும் நீா்.

Syndication

கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை பொழிவு குறைந்துள்ளதை அடுத்து பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அண்மையில் தீவிரமாக பெய்ததை அடுத்து, பேச்சிப்பாறை அணை வேகமாக நிரம்பியது. அணையிலிருந்து கடந்த வாரம் விநாடிக்கு 2,000 கனஅடி நீா் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வந்தது. மாவட்டத்தில் கடந்த 2 நாள்களுக்கும் மேலாக மழை தணிந்துள்ளது. இதனால், அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீா் படிப்படியாகக் குறைக்கப்பட்டது.

இதன்படி வியாழக்கிழமை மாலை அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீா் அளவு விநாடிக்கு 230 கன அடியாக குறைக்கப்பட்டது. இதையடுத்து கோதையாற்றில் பெருக்கெடுத்துப் பாய்ந்த நீா் வெகுவாகக் குறைந்தது. மேலும் திற்பரப்பு அருவியிலும் தண்ணீா் மிதமாக விழுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் ஓரிரு நாள்களில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதிக்கப்படுவா் எனத் தெரிகிறது.

நவ.3, 4-இல் வேலூருக்கு துணை முதல்வா் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஆய்வு

தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: சீமான்

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

SCROLL FOR NEXT