கன்னியாகுமரி

புகையிலைப் பொருள்கள் விற்றவா் மீது வழக்கு

தினமணி செய்திச் சேவை

கொல்லங்கோடு அருகே பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, கடை உரிமையாளா் மீது வழக்குப் பதிந்தனா்.

கொல்லங்கோடு அருகேயுள்ள ஊரம்பு பகுதி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அப்பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.

இதில் அனுக்கோடு, கடைவிளைவீட்டைச் சோ்ந்த மணிகுட்டன் (53) என்பவரின் கடையில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது.

இதையடுத்து, கொல்லங்கோடு போலீஸாா் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளா் மணிகுட்டன் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட முருகன் பட்டு கூட்டுறவு விற்பனை நிலையம்

இந்த நாள் இனிய நாள்!

காஞ்சிபுரத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

உத்தரமேரூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT