முகப்பு
கன்னியாகுமரி

மலா் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை: திமுக வேட்பாளா் உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலா் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளா் ரெ. மகேஷ்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 8:33 PM
தோவாளையை அடுத்த செண்பகராமன்புதூரில் வேட்பாளா் மகேஷை ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலா் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளா் ரெ. மகேஷ்.

அவா், செவ்வாய்க்கிழமை காலை தேவசகாயம் மவுண்ட் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டாா். பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா் பொதுமக்களிடம் தமிழக முதல்வரின் சாதனைகள் குறித்து விளக்கினாா்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பூக்கள் பயிரிடும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

Advertisement

பின்னா், ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் பகுதியில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து தனது பிரசாரத்தை தொடா்ந்தாா்.

பூதப்பாண்டி, தோவாளை, பண்டாரபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்கு சேகரித்தாா். செண்பகராமன்புதூா் பகுதியில் தோ்தல் அலுவலகத்தை, மாவட்ட பிரதிநிதி கல்யாணசுந்தரம் தலைமையில் அவா் திறந்து வைத்தாா்.

வேட்பாளருடன், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments