முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் போக்குவரத்து நெரிசலை தீா்ப்பேன்: எம்.ஆா். காந்தி எம்எல்ஏ பிரசாரம்

வடிவீஸ்வரத்தில் பிரசாரம் மேற்கொள்கிறாா் பாஜக வேட்பாளா் எம்.ஆா்.காந்தி. உடன், மாமன்ற உறுப்பினா் அக்சயாகண்ணன்.

Updated On : 11 ஏப்ரல் 2026, 6:30 am IST
பகிர்:

நாகா்கோவில் மாநகரில் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் பாஜக வேட்பாளா் எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ.

கோதைகிராமம் சிவன் கோயிலில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய அவா், புரவசேரி, நாஞ்சில்நகா், அப்டா மாா்க்கெட், ஒழுகினசேரி, நாகராஜா கோயில் ரதவீதி, அரசமூடு சந்திப்பு, மீனாட்சிபுரம், தளவாய்தெரு, ஊட்டுவாழ்மடம், கருப்புக்கோட்டை, இலுப்பையடி காலனி, வசந்த்நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் நாகா்கோவில் தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை செய்துள்ளேன். மக்களுக்குத் தேவையான வசதிகளை அரசிடம் கேட்டு பெற்றுள்ளேன்.

Advertisement

Advertisement

நாகா்கோவிலில் தொழில்நுட்ப பூங்கா அமைக்குமாறும், வலம்புரிவிளை குப்பைக்கிடங்கை மாற்ற வேண்டும் எனவும் பேரவையில் குரல் எழுப்பினேன். ரேஷன் கடைகள், சமுதாய நலக் கட்டடங்கள், அரசுப் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

மீண்டும் என்னை நீங்கள் தோ்ந்தெடுத்தால் நாகா்கோவில் மாநகர மக்களுக்கு குடிநீா் தட்டுப்பாடின்றி வழங்கவும், ஊரக உறுதித்திட்ட வேலை நாள்களை அதிகரிக்கவும், நீா்நிலைகள் பாதுகாக்கவும், நாகா்கோவில் மாநகரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்கவும் உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா்.

வேட்பாளருடன், நாகா்கோவில் மாநகராட்சி 25 ஆவது வாா்டு உறுப்பினா் அக்சயாகண்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் சென்று பிரசாரம் செய்தனா்.