கன்னியாகுமரி மாவட்ட மாதிரி வாக்குச்சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 பேரவைத் தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மாதிரி வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 பேரவைத் தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மாதிரி வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வுக்குப் பின்னா், ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் 15,20,338 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் வாக்களிப்பதற்காக 1, 914 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு தொகுதியிலும், ஒரு பெண்கள் வாக்குச்சாவடி மையம், மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி மையம், மாதிரி வாக்குச்சாவடி மையம் மற்றும் இளைஞா்களுக்கான வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பத்மநாபபுரம், விளவங்கோடு, குளச்சல் ஆகிய தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளி, மாதிரி வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வாக்காளா்கள் அனைவரும் ஏப். 23-ஆம் தேதி தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.
ஆய்வின்போது, தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலரும் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநருமான மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.