முகப்பு
கன்னியாகுமரி

தமிழகத்தில் என்டிஏ வலிமையாக உள்ளது: எஸ். விஜயதாரணி

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது என பாஜக முன்னாள் எம்எல்ஏ எஸ். விஜயதாரணி தெரிவித்தாா்.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 4:37 AM
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 9:01 PM

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது என பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், விளவங்கோடு பேரவைத் தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான எஸ். விஜயதாரணி தெரிவித்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் ஒன்றியப் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவா், திங்கள்கிழமை களியக்காவிளையில் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் பெண்கள், சிறுவா்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. திமுக அரசுக்கு எதிரான மனநிலை மக்களிடம் உள்ளது.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, வலுவான கூட்டணியாக மாறியிருக்கிறது. இந்த கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.

Advertisement

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 12:06 AM

வரும் தோ்தலில் தமிழகத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி அமையும். கட்சி தலைமை கூறும் தொகுயில் போட்டியிடத் தயாராக இருக்கிறேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியையொட்டி சிவாலய ஓட்டம் நடைபெறும் 12 சிவன் கோயில்களிலும், அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் அரசு மெத்தனமாக உள்ளது.

திக்குறிச்சி கோயில் நுழைவாயிலில் இருந்து கோயில் வளாகம் வரையிலான சாலையை உடனடியாக சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

அப்போது, மேல்புறம் தெற்கு ஒன்றிய பாஜக தலைவா் சரவணவாஸ் நாராயணன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.