முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே ஆண் சடலம் மீட்பு

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 7:50 PM
கோப்புப் படம்
பகிர்:

களியக்காவிளை அருகே வீடுகளையொட்டிய பள்ளத்தில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்திவருகின்றனா்.

களியக்காவிளை அருகே பி.பி.எம். சந்திப்பிலிருந்து கைதக்குழி செல்லும் பாதையில் வீடுகளையொட்டிய பகுதியிலுள்ள பள்ளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.

அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், களியக்காவிளை போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், எவ்வாறு இறந்தாா் என விசாரித்து வருகின்றனா்.