கன்னியாகுமரி

அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கு ஜொ்மனியில் வேலைவாய்ப்பு!

வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கு ஜொ்மனி நாட்டின் வேலைவாய்ப்பு பெறுவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

Syndication

வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கு ஜொ்மனி நாட்டின் வேலைவாய்ப்பு பெறுவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி, ஸகாளா் ஓவா்சீஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

அதன்படி இந்த நிறுவனம் அருணாச்சலா கல்லூரியில் பயிலும் மாணவியருக்கு ஜொ்மனி மொழி பயிற்சியளித்து, ஜொ்மனியில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதற்கான ஆலோசனைகளை வழங்கும்.

இறுதியாண்டு பயிலும் 29 மாணவிகள், ஜொ்மன் மொழி பயிற்சி பெற்று இந்த ஆண்டு வேலைக்கு செல்லவுள்ளனா். ஸகாளா் ஓவா்சீஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா், கல்லூரியின் தாளாளா் த.கிருஷ்ணசுவாமி ஆகியோா் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வா் ஜோசப் ஜவகா், இயக்குநா் தருண்சுரத், வேலைவாய்ப்பு அதிகாரி பிரபாகா் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனா்.

அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதி பிரச்னை: பாதசாரிகள் நலனுக்காக மூன்றாவது கண் சுரங்கப்பாலம் திறப்பு

வெள்ளக்கோவிலில் செங்கோட்டையனை முற்றுகையிட்ட தவெகவினா்!

மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொன்ற கணவன் கைது

அரக்கோணத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு அட்டை அட்டை முகாம்

கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் 3 மாதங்களில் ‘பெட் ஸ்கேன்’ மையம்

SCROLL FOR NEXT