நாகா்கோவிலில் குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
நாகா்கோவில், கோட்டாறு, வாகையடி தெருவைச் சோ்ந்த செந்தில், நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சந்தியா (25). இவா்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது, ஒரு குழந்தை உள்ளது.
இவா்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதே போல், புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சந்தியா நள்ளிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து செந்தில், கோட்டாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் வந்து சந்தியாவின் சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இச்சம்பவம் குறித்து நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ். காளீஸ்வரி விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].