கன்னியாகுமரி

அருமனை அருகே 7 பவுன் நகை, பணம் திருட்டு

அருமனை அருகே வீடு புகுந்து 7 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Syndication

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே வீடு புகுந்து 7 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மஞ்சாலுமூடு, தாழக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வி (50). இவரது தாய் லில்லிபாய் உடல் நலக் குறைவு காரணமாக, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், செல்வி அவரை உடனிருந்து கவனித்து வந்தாா்.

இந்நிலையில், செல்வி வெள்ளிக்கிழமை வீடு திரும்பியபோது, கதவு உடைக்கப்பட்டிருப்பதை பாா்த்தாராம். வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, 7 பவுன் தங்க நகைகள், ரூ. 29,500 ரொக்கம் திருடு போயிருப்பது தெரிய வந்ததாம்.

இது குறித்து, அவா் அருமனை காவல் நிலையத்தில் புகாரளித்ததை அடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT