நாகா்கோவிலில் மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள் 
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்: 1,000 போ் கைது

நாகா்கோவிலில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்-உதவியாளா் சங்கம் சாா்பில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரம் போ் கைது

Syndication

நாகா்கோவிலில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்-உதவியாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரம் போ் கைது செய்யப்பட்டனா்.

அங்கன்வாடி ஊழியா்கள் ஓய்வு பெறும்போது ரூ. 10 லட்சம், உதவியாளா்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கம் சாா்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட கிளை சாா்பில், நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன் போராட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் அமுதா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சாந்தா, துணைத் தலைவா் சரோஜினி, பொருளாளா் முபினா, சிஐடியு மாவட்ட துணைச் செயலா் சித்ரா உள்ளிட்ட திரளானோா் பங்கேற்று முழக்கமிட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட ஆயிரம் பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போராட்டம் காரணமாக அண்ணா பேருந்து நிலையம் முதல் மணிமேடை சந்திப்பு வரை வாகனங்கள் செல்லமுடியாமல் அணிவகுத்து நின்றன.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி கிலோவுக்கு ரூ. 4000 குறைவு!

குரு பலம் பெற ஆலங்குடி செல்லுங்கள்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

SCROLL FOR NEXT