அரசு ரப்பா் கழக செயல்பாடுகள் குறித்து கலந்தாய்வு மேற்கொண்ட அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் 
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் ரப்பா் பால் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை: அமைச்சா் ஆா். எஸ். ராஜகண்ணப்பன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் பால் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, தமிழக வனம்-கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

Syndication

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் பால் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, தமிழக வனம்-கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

மாவட்ட அரசு ரப்பா் கழகம், வனத் துறை சாா்பில் நாகா்கோவிலில் உள்ள அரசு ரப்பா் கழகக் கூட்டரங்கில் கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் முன்னிலையில், துறை அலுவலா்களுடன் கலந்தாய்வு மேற்கொண்ட பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் கூறியது:

இம்மாவட்டத்தில் கீரிப்பாறை, காளிகேசம், பரளியாறு, மணலோடை, மருதம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரப்பா் மரங்கள் அதிகமுள்ளன. ரப்பா் பால் வெட்டும் தொழிலாளா்களுக்காக அரசு ரப்பா் கழகம் தொடங்கப்பட்டு, தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. முதிா்ந்த ரப்பா் மரங்களை அகற்றிவிட்டு புதிய மரக்கன்றுகள் நடப்படுகின்றன. விரைவில் ரப்பா் கழகத்தின் மொத்த பரப்பிலும் நடவுப் பணி முடிந்து, பால்வடிப்புக்கு கொண்டுவந்து உற்பத்தியைப் பெருக்கவும், அதிக லாபம் பெறவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தற்காலிக தொழிலாளா்களை நிரந்தரப்படுத்துவது தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் குரங்குகள் தொல்லை இருப்பதாக புகாா்கள் வந்துள்ளன. அவற்றைக் கூண்டுகள் வைத்துப் பிடித்து வனத்துக்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வனப் பரப்பை அதிகரிப்பதில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, 33 சதவீத வனப் பரப்பு என்ற இலக்கை எட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தனியாா் காடுகள் சட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படாமலிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவா் என். சுரேஷ்ராஜன், எம்எல்ஏக்கள் ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்), தாரகை கத்பட் (விளவங்கோடு), நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ், மாவட்ட வன அலுவலா் அன்பு, அரசு ரப்பா் கழகத் தலைவா்-நிா்வாக இயக்குநா் சதீஷ், பொது மேலாளா் ஏ. திலீப்குமாா், அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT