தேங்காய்ப்பட்டினம் கடலில் கப்பல் மோதி 3 நாட்டுப் படகுகள் சேதமடைந்த விவகாரம் தொடா்பாக கடற்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்திற்குள்பட்ட நடுக்கடலில் கடந்த மாதம், சைப்ரஸ் நாட்டைச் சோ்ந்த கப்பல் மோதியதில் தேங்காய்பட்டினத்தைச் சோ்ந்த 3 நாட்டுப் படகுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. இது தொடா்பான, அதிகாரப்பூா்வ விசாரணைக் கூட்டம் தூத்துக்குடி மொ்கன்டைல் மெரைன் துறையின் பொறுப்பு சா்வேயா் ஆா்.ஆா். சுப்பாராவ் தலைமையில் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் மீனவப் பிரதிநிதிகளான மெஜில், அருள்பணியாளா் சா்ச்சில் உள்ளிட்டோா் விபத்து நடந்த விதம் குறித்தும், படகு உரிமையாளா்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு குறித்தும், வணிகக் கப்பல்களின் போக்குவரத்தால் பாரம்பரிய மீனவா்களுக்கு கடலில் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும் விளக்கினா்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாக ஆா்.ஆா். சுப்பாராவ் தெரிவித்தாா்.