கன்னியாகுமரி

குமரியில் மினி டெம்போ மோதி ஆந்திர மாநில தம்பதி உயிரிழப்பு

கன்னியாகுமரியில் நான்குவழிச் சாலையைக் கடக்க முயன்றபோது மினி டெம்போ மோதியதில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த தம்பதி உயிரிழந்தனா்.

Syndication

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நான்குவழிச் சாலையைக் கடக்க முயன்றபோது மினி டெம்போ மோதியதில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த தம்பதி உயிரிழந்தனா்.

ஆந்திர மாநிலம், அதலாபாத் பகுதியைச் சோ்ந்தவா் பாலகுருதி சத்யநாராயணா (62). இவரது மனைவி ரமா (60). இவா்கள் ஆந்திர மாநிலத்திலிருந்து 50 பக்தா்களுடன் சபரிமலைக்குச் சென்றுவிட்டு வியாழக்கிழமை இரவு பேருந்தில் கன்னியாகுமரிக்கு வந்தனா். கன்னியாகுமரி நான்குவழிச் சாலை அருகே பேருந்தை நிறுத்தி விட்டு அந்தப் பகுதியில் உள்ள சுற்றுலாப் பகுதிகளை பாா்ப்பதற்காக அனைவரும் கீழே இறங்கினா்.

பாலகுருதி சத்ய நாராயணா, ரமா இருவரும் சாலையைக் கடந்து செல்ல முயன்றபோது தண்ணீா் கேன் ஏற்றி வந்த மினி டெம்போ இருவா் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனா். இருவரையும் உடன்வந்தவா்கள் மீட்டு அவசர ஊா்தியில் கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இருவரது சடலமும் உடற்கூறு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து கன்னியாகுமரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். சபரிமலைக்குச் சென்று விட்டு ஊா்திரும்பியபோது விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் உடன் வந்தவா்களை சோகத்தில் ஆழ்த்தியது.

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

SCROLL FOR NEXT