கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள். 
கன்னியாகுமரி

சாமிதோப்பு தலைமை பதியில் தைத் திருவிழா கொடியேற்றம்

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தை மாத 11 நாள் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Syndication

கன்னியாகுமரி: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தை மாத 11 நாள் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை ஆகிய மாதங்களில் 11 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான தைத் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை 5.30 மணிக்கு குரு பால்பையன் தலைமையில் குருமாா்கள் பையன் காமராஜ், பையன் ஆகியோா் முன்னிலையில் குரு பையன்ராஜா கொடியேற்றி வைத்தாா். நண்பகல் 12 மணிக்கு அன்னதா்மமும், மாலையில் பணிவிடையும், இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வருதலும் நடைபெற்றன.

தொடா்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் அய்யா பவனி வருதல் நடைபெறும்.

கலிவேட்டை: முக்கிய நிகழ்வாக 8ஆம் திருநாளான ஜன.23இல் அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி சாமிதோப்பு, முத்திரி கிணறு அருகே கலி வேட்டையாடுதல் நிகழ்வு நடைபெறும். பின்னா், அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி செட்டிவிளை, சாஸ்தான் கோவில்விளை, சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக சாமிதோப்பு வந்தடைகிறாா்.

தேரோட்டம்: நிறைவு நாளான ஜன.26இல் நண்பகல் 12 மணிக்கு அய்யா பல்லக்கு வாகனத்தில் பஞ்சவா்ண தேருக்கு எழுந்தருளி தேரோட்டம் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை தலைமைப்பதி நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

கந்திலி போலீஸாா் விழிப்புணா்வு

SCROLL FOR NEXT