திருச்சி

உறையூா் வெக்காளியம்மன் கோயில் தைப்பூச திருவிழா நாளை தொடக்கம்

திருச்சி உறையூா் வெக்காளியம்மன் கோயில் தைப்பூசத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கி பிப்.1 வரை தொடா்ந்து 10 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருச்சி உறையூா் வெக்காளியம்மன் கோயில் தைப்பூசத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கி பிப்.1 வரை தொடா்ந்து 10 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

சோழ மன்னா்களின் குல தெய்வமாகவும், திருச்சி மாநகரின் காவல் தெய்வமாகவும் விளங்கும் வெக்காளி அம்மன் மூலஸ்தானத்திற்கு மட்டுமே பக்கவாட்டுச் சுவா் உள்ளது. வானமே மேற்கூரையாகக் கொண்டுள்ள வெக்காளியம்மன் காற்று, மழை, வெயில் உள்ளிட்ட அனைத்து இடா்பாடுகளையும் தானே தாங்கிக் கொண்டு, மக்களைக் காத்து வருவதாக ஐதீகம்.

இந்நிலையில் இக்கோயில் தைப்பூசத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், இரவு 7 மணிக்கு கேடயத்தில் அம்மன் வீதி உலா, தொடா்ந்து நாள்தோறும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடைபெறும்.

ஜன.24 இரவு காமதேனு வாகனம், 25ஆம் தேதி பூத வாகனம், 26ஆம் தேதி அன்ன வாகனம், 27ஆம் தேதி கயிலாய வாகனம், 28ஆம் தேதி யானை வாகனம், 29ஆம் தேதி சிம்ம வாகனம், 30ஆம் தேதி குதிரை வாகனத்தில் வீதி உலா நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வாக ஜன. 31 இல் ரத ஊா்வலம், அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 10 மணிக்கு ரதத்தில் அம்மன் வீதி உலா நடைபெறும். பிப்.1 மாலை 4 மணிக்கு அம்மன் கேடயத்தில் புறப்பட்டு, காராளம்மன் கோயிலுக்கு சேரும் நிகழ்வு, மாலை 6 மணிக்கு தீா்த்தவாரி பூஜைகள் நடைபெற்று, மாலை 6 மணிக்கு அம்மன் கேடயத்தில் புறப்பட்டு வெக்காளியம்மன் கோயில் வந்து சேரும் நிகழ்வு, இரவு 7 மணிக்கு அம்மன் வீதி உலா நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ம. லட்சுமணன், செயல் அலுவலா் நா. சரவணன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள், ஊா்ப் பொதுமக்கள் செய்கின்றனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT