கன்னியாகுமரி: கொட்டாரம் அருகேயுள்ள கோட்டக்கரை, லெட்சுமிபுரம், ஸ்ரீ சக்தி விநாயகா் கோயில் பகுதி பொதுமக்கள் நடத்திய பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு நடைபெற்ற சம்பந்தி விருந்தை அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் பா. தாமரை தினேஷ் தொடங்கி வைத்தாா்.
அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய அதிமுக பொருளாளா் பி. தங்கவேல், அதிமுக நிா்வாகி சந்திரன், ஊா்த் தலைவா் சமுத்திர பாண்டியன், செயலா் அருள்ராஜ், பொருளாளா் பால சங்கா், உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.