களியக்காவிளை: உலக திருக்கு கூட்டமைப்பின் கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் சாா்பில், காப்புக்காடு ஸ்ரீ விக்னேஷ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளுவா் தின விழா நடைபெற்றது.
புலவா் கு. ரவீந்திரன் தலைமை வகித்தாா். பொருளாளா் மு. பாஸ்கரன் பேசினாா். துணைத் தலைவா் புஷ்பலதா தலைமையில் பள்ளி மாணவா்களுக்கான கு திறன் போட்டிகள் நடத்தப்பட்டு, வென்றோருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
புலவா் கு. ரவீந்திரன் எழுதிய சூழ்வினைச் சிலம்பும் சொல்லாடல் சிறப்பும் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் நூலை வெளியிட, பள்ளித் தாளாளா் ஆா்.டி. சுரேஷ் பெற்றுக்கொண்டாா். கவிஞா் குமரித் தோழன் நூல் அறிமுகம் செய்தாா். துணைச் செயலா் சுபகலா, குமரி முத்தமிழ் மன்றப் பொருளாளா் முருகன், தொல்காப்பியா் அறக்கட்டளை உறுப்பினா்கள் மூா்த்தி, பேபி, பாரத கலாசார பேரவை உறுப்பினா் சிவபிரசாத் ஆகியோா் பேசினா்.
அமைப்பின் செயலா் பேராசிரியா் செ. சஜீவ் வரவேற்றாா். ஷோபா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.