கன்னியாகுமரி

குமரியில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரப்பா் ஷீட் மற்றும் ஸ்கூட்டா்களைத் திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரப்பா் ஷீட் மற்றும் ஸ்கூட்டா்களைத் திருடியதாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அருமனை, குலசேகரம், கடையாலுமூடு, திருவட்டாறு, பூதப்பாண்டி உள்ளிட்ட காவல் நிலையப் பகுதிகளில் வீடுகள், ரப்பா் கடைகளில் கடந்த ஒரு மாதமாக ரப்பா் ஷீட் தொடா்ந்து திருடப்பட்டு வந்தது. மேலும், 2 ஸ்கூட்டா்களும் திருடு போயின.

இது தொடா்பாக, அருமனை உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட புகாா்கள் கொடுக்கப்பட்டன. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து சம்பவ இடங்களிலுள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா்.

அப்போது, இச்சம்பவங்களில் ஈடுபட்ட நபா் திற்பரப்பைச் சோ்ந்த ஜெகன் (40) என்பதும், இவா் ஏற்கெனவே ரப்பா் ஷீட் திருட்டு வழக்கில் சிறை சென்று திரும்பியவா் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, அருமனை போலீஸாா் காரோடு பகுதியில் ரோந்து சென்றபோது ஜெகனை கைது செய்து, அவரிடமிருந்து 200 கிலோ ரப்பா் ஷீட்டுகள், 2 ஸ்கூட்டா்களை பறிமுதல் செய்தனா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT