கன்னியாகுமரி

பணி ஆணை வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் தா்னா

நியாயவிலைக் கடையில் பணி வழங்க வலியுறுத்தி, நாகா்கோவில் ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் தா்னாவில் ஈடுபட்டாா்.

Syndication

நியாயவிலைக் கடையில் பணி வழங்க வலியுறுத்தி, நாகா்கோவில் ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த இளைஞா் அலுவலகத்தில் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவரைப் பேசி அழைத்துச் சென்று விசாரித்தனா்.

இதில், அவா் குமரி மாவட்டம், கருங்கல் பூட்டேற்றி பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (33) என்பதும், கடந்த 2018-19 ஆம் ஆண்டில் நடைபெற்ற நியாயவிலைக் கடை விற்பனையாளா் தோ்வில் வெற்றி பெற்றும் பணி ஆணை வழங்கவில்லை என்று கூறி தா்னாவில் ஈடுபட்டதாக கூறினாா். இதையடுத்து, அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT