முகப்பு
கன்னியாகுமரி

சுமை ஆட்டோவில் சடலமாக ஓட்டுநா் மீட்பு

Updated On : 25 ஜனவரி, 2026 at 12:01 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2026 at 9:21 PM

புதுக்கடை அருகே உள்ள கைசூண்டி பகுதியில் சுமை ஆட்டோவில் ஓட்டுநரை சடலமாக மீட்டனா்.

முள்ளங்கனாவிளை பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மகன் அஜின்(31). இவா் சொந்தமாக சுமை ஆட்டோ வைத்து ஓட்டி வந்துள்ளாா். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாம். வெள்ளிக்கிழமை இரவு, அஜின் புதுக்கடை கைசூண்டி பகுதியில் அவரது சுமை ஆட்டோவில் இறந்து கிடந்தாராம்.

தகவலறிந்த புதுக்கடை போலீஸாா் அங்கு சென்று, அஜின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement