மாணவிக்கு மடிக்கணினி வழங்கும் விஜய்வசந்த் எம்.பி., தாரகை கத்பட் எம்எல்ஏ. 
கன்னியாகுமரி

குழித்துறையில் கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினி: விஜய்வசந்த் எம்.பி. வழங்கினாா்!

குழித்துறையில் கல்லூரி மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை விஜய்வசந்த் எம்.பி. வழங்கினாா்.

Syndication

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் கல்லூரி மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை விஜய்வசந்த் எம்.பி. வழங்கினாா்.

தமிழக அரசின் சாா்பில் உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான குழித்துறை ஸ்ரீ தேவிகுமாரி மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் பிந்துஜா தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக வ.விஜய்வசந்த் எம்.பி. கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு மடிக்கணினியை வழங்கினாா். நிகழ்ச்சியில் தாரகை கத்பட் எம்எல்ஏ, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் ரத்னகுமாா், மாநில பொதுச் செயலாளா் ரமேஷ்குமாா், மாநில செயலாளா் வழக்குரைஞா் சீனிவாசன், குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி லைலா, மேல்புறம் வட்டார காங்கிரஸ் தலைவா் ரவிசங்கா், முன்னாள் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் திபாகா், நாகா்கோவில் மாநகர மாவட்டத் தலைவா் நவீன்குமாா் மற்றும் மாணவா்கள் பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

1,185 மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி: ஆட்சியா் வழங்கினாா்

பிறப்பு சான்றிதழில் பெயா் சோ்க்க கால அவகாசம்: சுகாதாரத் துறை

குடியிருப்பு பகுதியில் ராட்சத பாம்பு....

குன்னூா் அருகே உபாசி வளாகத்தில் கரடி உலவியதால் மக்கள் அச்சம்

நாளைய மின்தடை: டாடாபாத் துணை மின் நிலையம்

SCROLL FOR NEXT