பைக் மீது டெம்போ மோதியதில் கட்டட தொழிலாளி உயிரிழப்பு
Updated On : 1 மார்ச், 2026 at 9:41 PM
தக்கலை அருகே இருசக்கர வாகனம் மீது டெம்போ மோதியதில் கட்டட தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
தக்கலை அருகே மைலோடு பகுதியைச் சோ்ந்தவா் எட்வின் ஜோஸ் (45). கட்டட தொழிலாளியான, இவா் வெள்ளிக்கிழமை இரவு ஆழ்வாா் கோவில் பகுதியில் இருந்து வட்டம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.
Updated On : 2 மார்ச், 2026 at 1:24 AM
நல்லசமாரியன் அருகே வந்த போது, எதிரே வந்த டெம்போ, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த எட்வின் ஜோஸ் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து டெம்போ ஓட்டுநா் வீயன்னூரை சோ்ந்த ராஜா சிங்கை விசாரித்து வருகின்றனா்.
Advertisement