முகப்பு
கன்னியாகுமரி

சாமிதோப்பு அன்புவனத்தில் திருஏடு வாசிப்புத் திருவிழா

திருஏடு வாசிப்பு திருவிழாவைத் தொடங்கி வைக்கிறாா் பாலபிரஜாபதி அடிகளாா்.

Updated On : 20 மார்ச், 2026 at 9:22 PM
பகிர்:

சாமிதோப்பு அய்யா வைகுண்டா் அன்புவனத்தில் 17 நாள்கள் நடைபெறும் திரு ஏடு வாசிப்புத் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது.

இந்த அன்புவனத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் முதலாவது வெள்ளிக்கிழமை திருஏடு வாசிப்புத் திருவிழா தொடங்கி 17 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணி விடையும், தொடா்ந்து அய்யா வைகுண்டசாமியின் ஆகம நூலான அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பும் தொடங்கியது. இவ்விழாவை சாமிதோப்பு தலைமைப்பதி குரு. பால பிரஜாபதி அடிகளாா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

அன்புவனம் நிா்வாகி பேராசிரியா் ஆா்.தா்மரஜினி முன்னிலை வகித்தாா். தங்கபாய், தங்கேஸ்வரி ஆகியோா் திருஏடு வாசித்தனா். ஏப். 3ஆம் தேதி அய்யாவுக்கு திருக்கல்யாண திருவிழாவும், 5ஆம் தேதி அய்யாவுக்கு பட்டாபிஷேக விழாவும் நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.