கச்சத்தீவு தேவாலயத் திருவிழா தொடங்கியது!
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழா வெள்ளிக்கிழமை (பிப். 27) கொடியேற்றத்துடன் தொடங்கியது குறித்து...
ராமேசுவரம்: கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழா வெள்ளிக்கிழமை (பிப். 27) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தியா, இலங்கையைச் சோ்ந்த10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் இதில் பங்கேற்கின்றனா். தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீவு ஆலயத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு தீவான கச்சத்தீவில் நடைபெறும் இந்தத் திருவிழாவில் இந்திய பக்தா்கள் பங்கேற்க வேண்டுமென யாழ்ப்பாணம் மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப்தாஸ் ஜெபரத்தினம் , ராமேசுவரம் பங்குத்தந்தை தாமஸ் பரிபாலனுக்கு அழைப்பிதழ் அனுப்பினாா்.
இதனையேற்று ராமேசுவரத்திலிருந்து கச்சத்தீவுக்கு 92 விசைப்படகுகள், 26 நாட்டுப் படகுகளில் செல்ல 3,033 ஆண்கள், 726 பெண்கள், 93 ஆண் குழந்தைகள், 57 பெண் குழந்தைகள் என மொத்தம் 3,996 போ் பதிவு செய்தனா். இவா்களுக்கு படகு உரிமையாளா்கள் மூலம் பயண அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
இதையடுத்து காவல்துறை, வருவாய்த் துறை, குடியுரிமைத் துறை மற்றும் சுங்க அதிகாரிகளின் தீவிர சோதனைக்குப் பிறகு 3,996 பக்தர்கள் வெள்ளிக்கிழமை (பிப். 27) அதிகாலை 6 மணிக்கு ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து படகுகள் மூலம் கச்சத்தீவு நோக்கிப் புறப்பட்டனர்.
இதையடுத்து வெள்ளிக்கிழமை புனித அந்தோணியாா் ஆலயம் முன் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கியது. அந்தோணியாா் உருவப்படம் பொறிக்கப்பட்ட கொடியாநது பழைய தேவாலயம் அருகே ஏற்றி வைக்கப்பட்டது.
தொடா்ந்து சிலுவைப் பாதையும், சிறப்பு திருப்பலியும், இரவு புனித அந்தோணியாா் உருவம் தாங்கிய தோ் பவனியும் நடைபெறுகிறது.
விழாவின் 2-ஆவது நாளான சனிக்கிழமை காலை 7 மணிக்கு தமிழ், சிங்கள மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். கூட்டு பிராா்த்தனைக்கு பிறகு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.
இதன் பிறகு, சனிக்கிழமை காலை 10 மணிக்கு கச்சத்தீவிலிருந்து அனைத்து விசைப்படகுகளும் புறப்பட்டு மாலை 5 மணிக்குள் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தை வந்தடையும்.
கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தா்களுக்குத் தேவையான உணவு, குடிநீா், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை யாழ்ப்பாணம் மாவட்ட நிா்வாகமும், அந்த நாட்டு கடற்படையினரும் செய்து வருகின்றனா்.
கச்சத்தீவு திருவிழாவுக்கு வருபவா்கள் மதுபானங்களை எடுத்து வரவோ, மது அருந்தி விட்டு வரவோ, புகைப்பிடிக்கவோ, தடை செய்யப்பட்ட பொருள்கள், நெகிழிப் பொருள்களை கொண்டு வரவோ அனுமதி கிடையாது. மடிக்கணினி, கேமரா உள்ளிட்ட மின்னணு பொருள்களை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கச்சத்தீவில் உணவு சமைக்கவோ, சேலை, கைலி, துணி வகைகள், சோப்பு, எண்ணெய் போன்றவற்றை வியாபாரம் செய்யவோ, பண்ட மாற்றம் செய்யவோ கூடாதென தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப பணம் எடுத்துச் செல்ல வேண்டும். தங்க நகைகள் அணிந்து செல்பவா்கள் அதுதொடா்பான விவரங்களை எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். கடலில் ஏதாவது இடற்பாடு ஏற்பாட்டால் உடனே இந்திய கடற்படையை அழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
முன்னதாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொங்கல் கொண்டாட்டங்கள் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டன. சென்னையில், கே.கே. நகர் உள்பட பல இடங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டன, அங்கு காவல் நிலைய வளாகத்திற்கு வெளியே காவல் துறையினர் தங்கள் குடும்பத்தினருடன் அறுவடைத் திருவிழாவைக் கொண்டாடினர். கே.கே. நகர் காவல் நிலைய ஊழியர்கள் பாரம்பரிய பொங்கல் உணவை ஒரு கொப்பரையில் சமைத்து ஒன்றாகக் கொண்டாடினர்.
சென்னையில் உள்ள செயிண்ட் மத்திய கத்தோலிக்க தேவாலயத்தில், பக்தர்கள் பாரம்பரிய உணவைத் தயாரித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டு பொங்கலைக் கொண்டாடினர். தேவாலய வளாகத்தில் மக்கள் நல்லிணக்கம் மற்றும் நன்றியுணர்வின் உணர்வில் ஒன்றுகூடுவதை காண முடிந்தது. மதுரையில், பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக அவனியாபுரத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு நிகழ்வு நடைபெற்றது. காளைகளை அடக்கும் விளையாட்டு ஏராளமான மக்களை ஈர்த்தது, குறைந்தது 960 காளைகளை அடக்குபவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர், இது அறுவடை விழாவின் முக்கிய கலாசார சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
The annual festival of St. Anthony's Church at Katchatheevu commenced on Friday with the ceremonial hoisting of the flag, as thousands of devotees from Tamil Nadu began their journey to the island shrine.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.