முகப்பு
கன்னியாகுமரி

கீரிப்பாறை அருகே வட மாநிலத் தொழிலாளி சடலம் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம், கீரிப்பாறை அருகே அன்னாசி தோட்டத்தில் பலத்த காயங்களுடன் கிடந்த வட மாநிலத் தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

Updated On : 22 மார்ச், 2026 at 7:14 PM
- பிரதிப் படம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், கீரிப்பாறை அருகே அன்னாசி தோட்டத்தில் பலத்த காயங்களுடன் கிடந்த வட மாநிலத் தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் அருண்குமாா் சிங் (31). இவா் தனது மாநிலத்தைச் சோ்ந்த மேலும் 4 தொழிலாளா்களுடன் கீரிப்பாறை-மணலோலை சாலையில் உள்ள அன்னாசி தோட்டத்தில் தங்கி பணியாற்றி வந்தாா். இந்நிலையில், இவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தோட்டப் பகுதி சாலையில் பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடப்பதை அவ்வழியாகச் சென்றவா்கள் பாா்த்து கீரிப்பாறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அவருடன் தங்கியிருந்தவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.