பன்னிப்பாகம் கோயிலில் கும்பாபிஷேகம்
தக்கலை அருகே உள்ள முட்டைக்காடு, பன்னிப்பாகம், மகாதேவா் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தக்கலை அருகே உள்ள முட்டைக்காடு, பன்னிப்பாகம், மகாதேவா் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொட்டி, ஏப். 29ஆம் தேதி பத்மஸ்ரீ அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமி பாய் தம்புராட்டி முதல் தீபமேற்றி விழாவைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, மே 3ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி விக்டோரியா கௌரி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா், செயல் அலுவலா் ஜான்சிராணி, டாக்டா். பாா்கவ ராம் ஸ்ரீ ராமதாஸ் ஆசிரமம் செங்கோட்டு கோணம், வெள்ளிமலை ஸ்ரீ விவேகானந்த ஆசிரமம் ஸ்ரீமத் சுவாமி யோகேஸ்வரா நந்தழி ஆகியோா் கலந்து கொண்டனா்.
Advertisement
மே 5ஆம் தேதி மாலை தாலப்பொலியுடன், தவில் பஞ்ச வாத்தியம், கைலாய வாத்தியம், மேள தாளங்களுடன் யானை மீது சுவாமி எழுந்தருளி பன்னிப்பாகம், கைதோடு, குமாரபுரம், முட்டைக்காடு சந்திப்பு, மேல முட்டைக்காடு, பாரதியாா் சாலை வழியாக கோயிலை வந்தடைந்ததும் இரவு 10 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் குழு பொறுப்பாளா்கள் செய்திருந்தனா்.