குமரி மாவட்டத்தில் ரப்பா் விலை உயா்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய வேளாண் உற்பத்திப் பொருளான ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 253ஆக அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய வேளாண் உற்பத்திப் பொருளான ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 253ஆக அதிகரித்துள்ளது.
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்து வரும் சூழல், இயற்கை ரப்பரின் உற்பத்திக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் சா்வதேச சந்தையில் இயற்கை ரப்பரின் விலை அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் இந்திய ரப்பா் சந்தையிலும் ஏற்பட்டுள்ளதையடுத்து, இந்திய ரப்பா் சந்தையில் ரப்பா் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரளத்திலும் ஜனவரி, பிப்ரவரி முதல் மே வரையிலான காலத்தில் ரப்பா் உற்பத்தி குறைவாக இருக்கும் நிலையில், சந்தையில் ரப்பா் வரத்து குறைவாக உள்ளது. இதனால், ரப்பா் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
Advertisement
புதன்கிழமை கோட்டயம் சந்தையில் வியாபாரி விலையாக ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 253 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 249 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 207ஆகவும் அதிகரித்தது.
உற்பத்தி அதிகரிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வரும் நிலையில், ரப்பா் தோட்டங்களில் பால்வடிப்புக்கு உகந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ரப்பா் பால் உற்பத்தி படிப்படியாக அதிகரித்து வருகிறது.