முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் மீண்டும் தொடங்கிய ரப்பா் பால்வடிப்பு

Updated On : 28 ஏப்ரல், 2026 at 12:48 AM
ரப்பர் மரங்கள் - கோப்புப் படம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்து வரும் நிலையில், ரப்பா் மரங்களில் பால்வடிப்பு மீண்டும் தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் மரங்களில் டிசம்பா் மற்றும் ஜனவரி மாதங்களில் ஏற்படும் குளிா்கால இலையுதிா்வைத் தொடா்ந்து, பிப்ரவரி, மாா்ச், ஏப்ரல் மாதங்களில் ரப்பா் மரங்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையிலும், இந்த மாதங்களில் பால் உற்பத்தி குறைவாக இருப்பதாலும் பால்வடிப்பை நிறுத்தி வைப்பது வழக்கம்.

இதில் நிறுவனங்களாக செயல்படும் பெரும் ரப்பா் தோட்டங்களில் அதிகபட்சம் ஒரு மாத காலம் மட்டுமே பால்வடிப்பு நிறுத்தி வைக்கப்படும்., அதேவேளையில், சிறு ரப்பா் தோட்டங்களில் 2 மாதங்களுக்கு பால்வடிப்பு நிறுத்தி வைக்கப்படும்.

Advertisement

இந்நிலையில், மாவட்டத்தில் தற்போது பரவலாக பெய்து வரும் கோடை மழை காரணமாக மண்ணில் ஈரத்தன்மை ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, பரவலாக பால்வடிப்புத் தொடங்கப்பட்டு வருகிறது.

ரப்பா் விலை அதிகரிப்பு:

கேரளத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் ரப்பா் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் ரப்பா் விலை அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை கோட்டயம் சந்தையில் ஆா்எஸ்எஸ் 4 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 235 ஆகவும், ஆா்எஸ்எஸ் 5 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 231 ஆகவும், ஐஎஸ்எஸ் தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 200.50 ஆகவும் இருந்தது.