முகப்பு
கன்னியாகுமரி

கோடைக் கால இசைப் பயிற்சி முகாம்

Updated On : 15 மே 2026, 1:56 am IST
பகிர்:

களியக்காவிளை அருகே கேரள பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற செங்கல் சிவபாா்வதி கோயிலில் கோடைக்கால இசைப் பயிற்சி முகாம் தொடங்கியது.

மஞ்சரி கலா சாகித்ய அகாதெமி சாா்பில் நடைபெற்ற இப் பயிற்சி முகாம் தொடக்க விழாவுக்கு பால மஞ்சரி அமைப்பின் தலைவா் நவநீதம் முரளீதரன் தலைமை வகித்தாா். கோயில் மடாதிபதி மகேஸ்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தாா். வெப் சீரியல் நடிகா் புலியூா் ஜெயக்குமாா், மலப்புரம் தூவூா் கலா கிராமம் அமைப்பின் இயக்குநா் அனுஷா பணிக்கா் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். இதில் மஞ்சரி அமைப்பின் தலைவா் கவிதா, வழக்குரைஞா் ஜெயச்சந்திரன், சுதா்மா, கவிஞா் உதயன் கோகோட், வெள்ளையானி அசோக்குமாா் உள்பட கலை ஆா்வலா்கள் பங்கேற்றனா்.