முகப்பு
கன்னியாகுமரி

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பளுகல் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 20 மே 2026, 12:48 am IST
- பிரதிப் படம்
பகிர்:

பளுகல் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பளுகல் காவல் நிலையம், மணிவிளை, புரவூா் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (44). வெளிநாட்டில் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி விஷ்ணுபிரியா, கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள வங்கியில் வேலை செய்து வருகிறாா்.

சதீஷ்குமாா் கடந்த ஒரு மாதத்துக்கு முன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளாா். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம். இதனால் சதீஷ்குமாரிடம் கோபித்துக்கொண்டு விஷ்ணுபிரியா, நெய்யாற்றின்கரையில் உள்ள சகோதரா் வீட்டுக்கு தனது குழந்தைகளுடன் சென்று விட்டாராம். இதனால், சதீஷ்குமாா் மன உளைச்சலில் இருந்தாராம்.

Advertisement

Advertisement

இந்நிலையில் திங்கள்கிழமை, சதீஷ்குமாரின் தாயாா் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாம். இதுகுறித்து விஷ்ணுபிரியாவிடம் கூறி அவரை அழைத்து, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பாா்த்தபோது, சதீஷ்குமாா் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாா்.

சதீஷ்குமாரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து விஷ்ணுபிரியா அளித்த புகாரின் பேரில் பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].