கோப்புப்படம் 
தென்காசி

கடையம் அருகே லாரி மோதி 3 மாடுகள் பலி

கடையம் அருகே லாரி மோதியதில் 3 எருமை மாடுகள் பலியானதால் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

DIN

கடையம் அருகே லாரி மோதியதில் 3 எருமை மாடுகள் பலியானதால் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் மாடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார். செவ்வாய்கிழமை இரவு குற்றாலத்திலிருந்து எருமை மாடுகளை ரவணசமுத்திரத்திற்கு கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது தீர்த்தாரப்பபுரத்தில் உள்ள தனியார் குவாரியிலிருந்து தென்காசிக்கு ஜல்லி ஏற்றிச் சென்ற லாரி மாதாபுரம் அருகே வந்த போது எதிர்பாராமல் மாடுகள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

இதில் மூன்று எருமை மாடுகள் சம்பவ இடத்திலேயே  உயிரழந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடையம் காவல்துறையினர் லாரியை பறிமுதல் செய்து வண்டி ஓட்டுநரான சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த ராஜாமணி மகன் செல்வத்தை கைது செய்தனர்.  இதுகுறித்து கடையம் காவல் உதவி ஆய்வாளர் காஜாமுகைதீன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார். 

கடையம் பகுதியிலிருந்து குவாரிகளிலிருந்து ராட்சத டாரஸ் லாரிகள் மூலம் விதியை மீறி அதிகளவு பாரத்துடன் செல்வதால் சாலை சேதமடைவதோடு அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

மேலும் வரையறுக்கபட்ட நேரத்தை விட இரவு நேரங்களிலும் இந்த லாரிகள் இயங்குகின்றன.  இதுகுறித்து அதிகாரிகளுக்கு பல முறை தெரியப்படுத்தியும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொது மக்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT