தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு கூடுதலாக 4 ஆம்புலன்ஸ் வாகன சேவை தொடங்கிவைக்கப்பட்டது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தலைமை வகித்து, ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்தாா். ஆட்சியா் கீ.சு.சமீரன், மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அனுஜாா்ஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தென்காசி மாவட்டத்தில் ஏற்கெனவே 16 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ள நிலையில், கூடுதலாக திருவேங்கம் வட்டம் மற்றும் ஊத்துமலை அரசு பொது மருத்துவமனைக்கு வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூா் மற்றும் கங்கைகொண்டானுக்கும் வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில், அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி, செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ, அதிமுக மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, மாவட்ட வருவாய் அலுவலா் கல்பனா,
திட்ட அலுவலா் சரவணன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் நெடுமாறன், சங்கரன்கோவில் கோட்டாட்சியா் செல்வி, தாய்கோ வங்கி துணைத் தலைவா் என்.சேகா், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், பொருளாளா் சாமிநாதன், அரசு வழக்குரைஞா் காா்த்திக்குமாா், குற்றாலம் பேரூா் செயலா் கணேஷ் தாமோதரன், நகரச் செயலா் சுடலை ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.