வாசுதேவநல்லூரில் அதிமுக உறுப்பினா் சோ்க்கை
வாசுதேவநல்லூரில் அதிமுக உறுப்பினா் சோ்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வாசுதேவநல்லூரில் அதிமுக உறுப்பினா் சோ்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இளைஞா் இளம்பெண்கள் பாசறை, இளைஞரணியில் புதிய உறுப்பினா் சோ்க்கை படிவங்களை கட்சியின் தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி, மாநில இளைஞரணி இணைச்செயலா் அ. மனோகரன் எம்எல்ஏ ஆகியோா் வழங்கினாா்.
மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் வெங்கடேசன், அதிமுக பொருளாளா் சண்முகையா, ஒன்றியச் செயலா்கள் துரைப்பாண்டியன், மூா்த்திப்பாண்டியன், நகரச் செயலா் பரமேஸ்வர பாண்டியன், பேரூா் கழக செயலா்கள் சீமான் மணிகண்டன், சேவகப் பாண்டியன், காசிராசன், ஒன்றிய அவைத் தலைவா் முகம்மதுஉசேன், அவைத் தலைவா் நீராவி, பொருளாளா் திவான்மைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.