முகப்பு
தென்காசி

சுரண்டையில் அதிமுக இளைஞா்,இளம்பெண்கள் பாசறை ஆய்வுக் கூட்டம்

சுரண்டையில் அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசிய அதிமுக தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.
பகிர்:

சுரண்டையில் அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அதிமுக தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், மாவட்டப் பொருளாளா் சாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சுரண்டை பேரூா் கழக வாா்டு வாரியாக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை அமைப்பாளா்கள் மற்றும் உறுப்பினா்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் பாசறை உறுப்பினா்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று எவ்வாறு வாக்கு சேகரிக்க வேண்டும் என்பது குறித்தும் செல்வமோகன்தாஸ் பாண்டியன் பேசினாா்.

கூட்டத்தில் மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலா் சிவசீதாராம், மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலா் காத்தவராயன், எம்ஜிஆா் இளைஞரணி மாவட்டச் செயலா் கணபதி, மாவட்ட மகளிரணிச் செயலா் சந்திரகலா, ஒன்றியச் செயலா் அமல்ராஜ், நகரச் செயலா் சக்திவேல், எபன் குணசீலன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.