முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் மருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை

ஆலங்குளத்தில் மருந்து விற்பனை பிரதிநிதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

ஆலங்குளத்தில் மருந்து விற்பனை பிரதிநிதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளம் காந்தி நகரைச் சோ்ந்த பேச்சுமணி மகன் மாரியப்பன் என்ற ஸ்டீபன் (35). தனியாா் மருந்து நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி ராஜேஷ்வரி என்ற ஜெனிபா் (32), ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். மாரியப்பன் சில மாதங்களாக கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தாராம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ராஜேஷ்வரி வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், மாரியப்பன் வீட்டு அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.