எல்ஐகே ஒத்திவைப்பால், முன்னதாகவே வெளியாகும் காளிதாஸ் 2!
நடிகர் பரத் நடித்துள்ள காளிதாஸ் 2 படத்தின் வெளியீடு குறித்து...
நடிகர் பரத் நடித்துள்ள காளிதாஸ் 2 திரைப்படம் திட்டமிட்டத்தை விட முன்கூட்டியே வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி ஏப்.3ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகவிருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் பரத். பின்னர் காதல், வெயில், பழனி போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார். பின்னர், வெற்றி - தோல்வி என ஏற்ற இறக்கங்களுடனே இருந்தார்.
கடந்த 2019இல் காளிதாஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். ஸ்ரீ செந்தில் இயக்கிய இந்தப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்தப் படத்தினை ஸ்கை பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சாம் சிஎஸ் இசையமைக்கிறார். இதில் பவானி ஸ்ரீ, அபர்ணதி நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. நடிகர் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே ஒத்திவைப்பால், லீடர் படத்தைத் தொடர்ந்து காளிதாஸ் 2 திரைப்படமும் ஏப்.3ல் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
Kaalidas 2 also gets preponed from the scheduled date In theatres from Apr first week.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.