நடிகர் பரத்தின் புதிய திரைப்படம்!
நடிகர் பரத் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம்...
நடிகர் பரத், ராஜேஷ் மாதவன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
நடிகர் பரத் மற்றும் மலையாளத் திரையுலகில் இயல்பான நடிப்பாலும் நகைச்சுவையாலும் தனி முத்திரை பதித்த நடிகரும் இயக்குநருமான ராஜேஷ் மாதவன் இருவரும் இணையும் புதிய திரைப்படம், பூஜையுடன் தொடங்கியுள்ளது.
ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் (TWIN TOWER PRODUCTIONS) மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் LLP (D CHRONICLE PRODUCTIONS LLP) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் எம். குரு எழுதி இயக்குகிறார். நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள் நிறைந்த கமர்ஷியல் திரைப்படமாக இது உருவாகிறது.
Advertisement
Advertisement
இப்படத்தின் பூஜையில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் உற்சாகமாகக் கலந்துகொண்டனர். பரத், ராஜேஷ் மாதவன், சிவேஷ்தா ராஜ் (வைஷாலி ராஜ்), முனீஷ்காந்த், சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இயக்குநர் விருமாண்டி முதல் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கேரளாவின் எழில்மிகு ஆலப்புழை பகுதிகளில் மொத்தம் 45 நாட்கள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
The shooting of the film starring actor Bharath and Rajesh Madhavan has begun.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.