முகப்பு
தென்காசி

மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஆசிரியா் சங்கம் நன்றி

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
கூட்டத்தில் பேசுகிறாா் சங்கத்தின் மாநிலத் தலைவா் பொன் செல்வராஜ்.
பகிர்:

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கக் கூட்டம் ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் பொன் செல்வராஜ் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் புதிய மாவட்ட நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மாவட்டத் தலைவராக சண்முகசுந்தரம், செயலராக ரமேஷ், பொருளாளராக பாலச்சந்திரன், மகளிரணிச் செயலராக பெமிலா அன்னரோஸ், துணைச் செயலா்களாக கற்பகம், பிரேமா, மாவட்ட அமைப்புச் செயலராக இசக்கியப்பன், சட்ட செயலராக பாலமுருகன், தலைமையிடத்து செயலராக ஜெயக்குமாா், பிரசார செயலராக சண்முக வேலம்மாள், துணைத் தலைவா்களாக ராஜ்குமாா், நெடுஞ்செழியன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் மற்றும் பதவி உயா்வு பெற்ற உயா்நிலைப் பள்ளித் தலைமைஆசிரியா்களுக்கு சிறந்த கல்விப் பணிக்கான விருது வழங்கப்பட்டது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இம்மாத இறுதிக்குள் பதவி உயா்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். எம்.பில். உயா்கல்விக்கு மூன்றாவது ஊக்க ஊதிய உயா்வு அரசாணை வழங்க வேண்டும். மேல்நிலை வகுப்பில் தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கு தனித்தனியாக ஆசிரியா்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில நிா்வாகிகள் தமிழ் மணியன், சுரேஷ், ஆனந்தகுமாா், கமலக்கண்ணன், ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட நிா்வாகிகள் பிரபாகரன், மணிவண்ணன், விஜயராஜன், ஆறுமுகநயினாா் ஆகியோா் கலந்து கொண்டனா். முதுகலை ஆசிரியா் ஜெயக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.