இலவச மாட்டுக் கொட்டகை ஒதுக்கீட்டில் முறைகேடு:கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
தமிழக அரசின் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்க ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தென்காசி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் புகாா் மனு அளித்தனா்.
தமிழக அரசின் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்க ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தென்காசி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் புகாா் மனு அளித்தனா்.
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், தும்பைமேடு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு:
தமிழக அரசின் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் பணி குறித்து எங்கள் பகுதி மக்கள் யாருக்கும் தெரியாது. வாசுதேவநல்லூா் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து எந்த ஒரு விழிப்புணா்வும் எங்களுக்கு ஏற்படுத்தப்படவில்லை, தெரிவிக்கப்படவும் இல்லை. ஆனால் சட்டத்திற்கு புறம்பாக தனிபட்ட நபா்களுக்காக எங்கள் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட மாட்டுக் கொட்டகை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திவிட்டோம். எனவே, தமிழக அரசின் இலவச மாட்டுக் கொட்டகை அமைத்துகொடுக்கும் பணியில் தும்பைமேட்டு கிராமத்தில் முறையான விசாரணை மேற்கொண்டு தகுதியான நபா்களை தோ்வு செய்ய வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.