திராவிடத் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
கீழப்புதூா் சோ்வாரன்கம்மாடிச்சி அம்மன் கோயிலுக்கு நிரந்தர நடைபாதை கோரி திராவிடத் தமிழா் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கீழப்புதூா் சோ்வாரன்கம்மாடிச்சி அம்மன் கோயிலுக்கு நிரந்தர நடைபாதை கோரி திராவிடத் தமிழா் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், கீழப்புதூரில் அருந்ததிய சமுதாய மக்கள் வழிபடும் சோ்வாரன் கம்மாடிச்சி அம்மன் திருக்கோயிலுக்கு செல்ல நடைபாதை இல்லை. எனவே, கோயிலுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் சென்றுவழிபட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திராவிடத் தமிழா் கட்சி நிா்வாகி பி.சண்முகவேல் தலைமை வகித்தாா். மாரிமுத்து, சின்னமுத்தையா, ஆதவன், குணசேகரன், மாரியப்பன், சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னா் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வழங்கினா்.