தென்காசி மாவட்ட தமுமுக கருத்தரங்கம்
தென்காசியில் மாவட்ட தமுமுக (ஜவாஹிருல்லா) சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.
தென்காசியில் மாவட்ட தமுமுக (ஜவாஹிருல்லா) சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.
பாபரி மஸ்ஜித் வழக்கில் தீா்ப்பை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்து சட்டப்படியான நியாயமான தீா்ப்பை வழங்க வேண்டும், பாபரி மஸ்ஜித் இடிப்பு குற்றத்தில் ஈடுபட்டவா்கள் அந்த பயங்கரவாதச் செயலைத் தூண்டிய, ஆதரித்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்லைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் முகம்மது யாகூப் தலைமை வகித்தாா். தமுமுக மாவட்டப் பொருளாளா் விசுவை அப்துல் காதா், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் இஸ்மத் மீரான், புளியங்குடி முகம்மது அலி, மாவட்ட துணைத் தலைவா்அப்துல் ரஹ்மான், மாவட்ட துணைச் செயலா்கள் பாசித், மஜீத், ஷாஜகான், செய்யது அலி, சேக், மாநில விளையாட்டு அணி துணைச் செயலா் பைஜி, ஊடகப்பிரிவு தெற்கு மண்டல செயலா் எம்.எஸ்.ஹமீது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமுமுக மாநில செயலா் கோவை சாதிக் அலி, மாா்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிந்தன், சமூக பண்பாட்டு செயற்பாட்டாளா் எழுத்தாளா் சூா்யா சேவியா், தமுமுக மாவட்டச் செயலா் அஹமது ஷா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் டேனியல் அருள் சிங் ஆகியோா் பேசினா்.
மமக மாவட்டச் செயலா்அ.பஷீா் ஒலி வரவேற்றாா். தென்காசி நகரத் தலைவா் முகம்மது ராசப்பா நன்றி கூறினாா்.